இயல், இசை மற்றும் நாடகக்கலையில் பல ஆண்டுகளாக சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களை கவுரவிக்கும் வகையில் 90 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டிருந்தது .

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் விருதாளர்களுக்கு கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியபோது, என் மீது ஏன் இவ்வளவு பாசம்? என இசைஞானி இளையராஜா அடிக்கடி கேட்டார். அவருக்கு நமக்கு இருப்பது கலைப்பாசம், தமிழ்ப்பாசம் மற்றும் தமிழர் பாசம். அதனால்தான் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது என்றார்.