கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கன்னி வெடி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். அடுத்து பெயரிடப்படாத மற்றொரு தமிழ்ப் படத்தில் இயக்குநர் மிஷ்கினுடன் இணைந்து நடித்து வருகிறார்.

நடிகை தற்போது ரவி கிரண் கோலா இயக்கும் புதிய படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ‘வாரிசு’ படத்தை தயாரித்த தில் ராஜு இப்படத்தையும் தயாரிக்கிறார்.
இன்று காலை ஐதராபாத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. கிராமிய பின்னணியில் உருவாகும் ஆக்ஷன் படமாக இது உருவாகிறது.