புஷ்பா 2 தி ரூல் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் இயக்குனர் அட்லீயுடன் இணைந்திருக்கிறார். AA22xA6 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் தீபிகா படுகோன், மிருணாள் தாக்கூர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹாலிவுட் தரத்திற்கு உருவாகும் இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மும்பையில் நடந்த படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புகாக தற்போது படக்குழு அபுதாபிக்குச் சென்றுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையில், இயக்குனர் அட்லீ சமீபத்திய பேட்டி ஒன்றில், இப்படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்தார். அதில், AA22xA6 படப்பிடிப்பு நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படம் மிகவும் புதியதாக இருக்கும் ராஜாராணி, தெறி, மெர்சல், பிகில் மற்றும் ஜவான் உள்ளிட்ட என் படங்களுக்கு ரசிகர்கள் அளித்த அன்பே இந்தப் படத்தை உருவாக்கும் ஊக்கமாக இருந்தது. இப்போதிருந்தே சொல்லிக்கொள்கிறேன், இதுவரை மக்கள் பார்த்திராத விஷயத்தை நாங்கள் காட்டப் போகிறோம். இப்படத்தில் ஹாலிவுட் தொழில்நுட்பக் குழுவும் இணைந்து பணியாற்றுகிறது என்று தெரிவித்துள்ளார்.