வாழ்க்கையில் பல துன்புறுத்தல்களை சந்தித்தேன், ஆனால் அவற்றை எதிர்கொண்டு முன்னேறியதால்தான் இன்று இந்த நிலையில் இருக்கிறேன்,” என நடிகை சஞ்சனா கல்ராணி தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ள அவர், ஒரு கன்னட படப்பிடிப்பில் ஹீரோ தன்னை காயப்படுத்தியதாக கூறினார்.

அவர் கூறுகையில், “ஒரு கன்னட படத்தில் நடிக்கும்போது சங்கடமாக இருந்தது. பெயர் சொல்ல விரும்பவில்லை. அந்த படத்தின் ஹீரோ என்மீது கோபமாக இருந்தார். ஒரு காட்சியில் என் கையை பிடித்து அழைத்து செல்ல வேண்டியிருந்தது. ஆனால் அவர் உண்மையிலேயே கோபத்தில் என் கைகளை இறுக்கமாக பிடித்து நசுக்கினார்.
நான் வலிக்கிறது என்றபோதும் அவர் கேட்கவில்லை. உடனே படப்பிடிப்பை நிறுத்தி, ‘நான் அடிபட வரவில்லை… இது ஆக்ஷன் சீன் அல்ல’ என்று கூறினேன். இப்படிப் பட்டவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றுள்ளார்.