தமிழில் ‘கங்குவா’, ‘ரெட்ரோ’ ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படம் ‘கருப்பு’. இப்படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தற்போது சூர்யா தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகிவரும் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸில் நடைபெற்று வருகிறது. அங்கு ஒரு பாடல் காட்சியுடன் சேர்த்து, முக்கியமான சண்டைக் காட்சியையும் படமாக்கி வருகிறார்கள்.
ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் ரவீணா டாண்டன், ராதிகா சரத்குமார் மற்றும் பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.