நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். இன்னும் திருமணம் செய்யவில்லை.

தற்போது சண்டிகரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை இவர் திருமணம் செய்யப் போவதாக தகவல் பரவியது. இரண்டு குடும்பங்களும் நீண்ட நாட்களாகவே நெருங்கிய நட்பில் உள்ளதாக கூறப்பட்டது.
இதுபற்றி திரிஷா தரப்பில் தெரிவித்தது என்னவென்றால், அந்த தகவல் உண்மையில்லை வெறும் வதந்தி தான் என்று கூறியுள்ளார்கள். இதனிடையே, இன்ஸ்டாகிராமில் திரிஷா வெளியிட்ட பதிவில், “என் வாழ்க்கையைப் பற்றி மக்கள் முடிவெடுப்பதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. அதேபோல ஹனிமூன் செல்வதைப் பற்றியும் சொல்லி விடுங்கள்” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.