கமிட்டி குர்ரல்லு’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் யது வம்சி. இந்தப் படத்தை நிஹாரிகா கொனிடேலா தனது பிங்க் எலிபண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்தார். படம் வசூலில் நல்ல வெற்றியைப் பெற்றதுடன், தெலுங்கானா அரசின் கத்தார் விருதுகள் உட்பட பல விருதுகளையும் வென்றது.

தற்போது, இந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் இணைந்து ஒரு புதிய படத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் துவங்கும் என கூறப்படுகிறது. நடிகையாக இருந்து தயாரிப்பாளராக மாறிய நிஹாரிகா கொனிடேலா தற்போது தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.