தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவுடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இருவரும் தங்களது திரைப்படப் பணிகளில் பிஸியாக ஈடுபட்டு வருகின்றனர்.

சினிமா படப்பிடிப்புகளுடன் சேர்த்து, சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் அடிக்கடி உரையாடுவதையும், அழகிய புகைப்படங்களை பகிர்வதையும் சோபிதா துலிபாலா வழக்கமாக செய்து வருகிறார். இதன் மூலம் அவர் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சோபிதாவிடம், நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நடிகையின் தனித்தன்மையே அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வசீகரம். கவர்ச்சியாக நடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அந்த கவர்ச்சி ரசிக்கும்படியாகவும், நாகரிகமாகவும் இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை, நடிகைக்கு தேவையான அனைத்து அம்சங்களும் அவசியமானவை,” என்று தெரிவித்துள்ளார்.