நடிகரும் இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி தற்போது நடிகர் சூர்யாவை வைத்து ‘கருப்பு’ எனும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி உள்ளார் நடிகர் மணிகண்டன்.
இந்த நிலையில், ஆர்ஜே பாலாஜி நடிகர் மணிகண்டனிடம் ஒரு புதிய கதையைச் சொல்லியுள்ளார். அந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்ததால், மணிகண்டன் அதில் நடிக்க ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘கருப்பு’ திரைப்படம் வெளியாகிய பின் இந்த புதிய திட்டத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.