‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இளம் ரசிகர்களை கவர்ந்த நடிகை கயாடு லோஹர், தற்போது பல மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் சென்னை நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், “இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஐந்து திரைப்படங்களில் நடித்து வருகிறேன். நான் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவள், ஆனால் என் தாய்மொழி நேபாளி” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது அதர்வா முரளியுடன் இணைந்து ‘இதயம் முரளி’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து ஒரு புதிய படத்திலும் நடிக்க உள்ளதாகவும், சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்திலும் அவர் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.