தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர் நயன்தாரா. கடந்த இருபது ஆண்டுகளாகவும் அவரது நிலையை வேறு யாராலும் மாற்ற முடியவில்லை. படம் வெற்றி பெற்றாலோ இல்லையோ, அவருக்கான வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.

2003ல் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் வெளிவந்த ‘மனசினக்கரே’ என்ற மலையாளப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் 2005ல் ஹரி இயக்கிய ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சினிமா துறையில் தனது 22ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளதை நயன்தாரா சமீபத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், “திரைப்படங்கள் என் வாழ்க்கையின் காதலாக மாறும் என்று தெரியாமல் கேமரா முன் நான் முதன்முதலில் நின்று 22 ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு ஷாட்டும், ஒவ்வொரு அமைதியும் என்னை வடிவமைத்தது, குணப்படுத்தியது, நான் யார் என்பதை உருவாக்கியது. இதற்காக என்றும் நன்றியுடன் இருப்பேன்,” என தெரிவித்துள்ளார்.
தற்போது நயன்தாரா தமிழ் மொழியில் ‘மூக்குத்தி அம்மன் 2’, ‘ஹாய்’ ஆகிய படங்களிலும், தெலுங்கில் ‘மன ஷங்கர வரபிரசாத் காரு’ படத்திலும், கன்னடத்தில் ‘டாக்சிக்’ படத்திலும் நடித்து வருகிறார்.