நடிகரும் ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னலுமான மோகன்லால், தாதாசாகேப் பால்கே விருது பெற்றநிலையில், புதுடெல்லியில் ராணுவத் தளபதியை சந்தித்து பாராட்டு பெற்றார்.இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மோகன்லால்,”ராணுவத் தளபதியிடம் இருந்து பாராட்டு பெறுவது ஒரு பெரிய அங்கீகாரம் மற்றும் மரியாதை. இது ஒரு நல்ல சந்திப்பு. தாதாசாகேப் பால்கே விருது இதற்கு ஒரு காரணம். நான் 16 ஆண்டுகளாக ராணுவத்தில் ஒரு பகுதியாக இருக்கிறேன்.புதிய தலைமுறையை ராணுவத்திற்குள் கொண்டு வர முயற்சிப்பேன்,” என்று கூறினார்.
