நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி, தற்போது பாலிவுட்டில் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு, அவர் நடிகர் தனுஷை வைத்து புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் துவங்கி, மார்ச் மாதம் முடிவடையும் என கூறப்படுகிறது.
அதன்பின்னர், விக்கி கவுசல் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் பாலிவுட் படத்திற்கும் ராஜ்குமார் பெரியசாமி தேதி ஒதுக்கி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் இனிவரும் நாட்களில் துவங்க உள்ளன என்றும் கூறப்படுகிறது.