டோலிவுட்டின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா சென்ற கார் சிறிய விபத்துக்கு உள்ளானதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இதுகுறித்து பதிலளித்துள்ள விஜய் தேவரகொண்டா “எல்லாமே நன்றாக இருக்கிறது. கார் சின்ன மோதலுக்கு ஆளானது. ஆனால் நாங்கள் நன்றாக இருக்கிறோம். இப்போதுதான் எனது ஒர்க் அவுட்டை செய்து முடித்துவிட்டு வீட்டிற்கும் திரும்பினேன். தலை கொஞ்சம் வலிக்கிறது. ஆனால் ஒரு பிரியாணியும் தூக்கமும் இதை சரி பண்ணிவிடும் என்று நினைக்கிறேன். உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி. தயவு செய்து இது குறித்து நீங்கள் மனதை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்” என்று கூறியுள்ளார்
