பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் அக்சரா ரெட்டி. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, அவர் சமீபத்தில் வெளியான ‘ரைட்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த நிலையில், ஒரு பேட்டியில் அவர் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், “என் அம்மா இறந்த பிறகு, சினிமாதான் எனக்கு மிகவும் பிடித்த துறையென்று முடிவு செய்தேன். கல்லூரி முடிந்ததும் ஜார்ஜியா சென்று சைக்காலஜி படித்தேன். எனக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளையும் சரளமாக பேசத் தெரியும்,” என்றார்.
மேலும், “ரைட் திரைப்படம் மூலமே நான் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானேன். அதற்கு முன்பு பில் கேட்ஸ் என்ற கன்னட திரைப்படத்தில் நான் நாயகியாக நடித்திருந்தேன். நான் கவர்ச்சிக்காக அல்ல, ஒரு நல்ல நடிகையாகவே பார்வையாளர்களிடம் அறியப்பட விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.