இரண்டு மாதங்களாக டிரெண்டிங்கில் டாப் இடத்தில் உள்ள வெப் தொடர் தான் மண்டலா மர்டர்ஸ். இது ஜூலை 25-ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியானது. முதல் நாளிலிருந்தே இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தத் தொடர் வெளியானதிலிருந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக நெட்பிளிக்ஸின் டாப் 10 பட்டியலில் உள்ளது. இந்தத் தொடர் ‘தி புட்சர் ஆப் பெனாரஸ்’ நாவலை அடிப்படையாகக் கொண்டது. இதில் வாணி கபூர், சுர்வீன் சாவ்லா மற்றும் வைபவ் ராஜ்குப்தா ஆகியோர் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோபி புத்ரன் மற்றும் மனன் ராவத் ஆகியோர் இயக்கியுள்ள இந்த தொடர் மொத்தம் 8 எபிசோடுகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
