‘காந்தாரா சாப்டர் 1’ வெளியான பின்னர், நடிகை ருக்மிணி வசந்த் இந்திய அளவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார். அவரின் அழகு மட்டுமன்றி, திறமையான நடிப்பும் ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அவர் ஒரு முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

‘காந்தாரா’ படத்தை பார்த்த அனைவரும் ருக்மிணியை ‘நேஷனல் கிரஷ்’ எனக் குறிப்பிடுகின்றனர். புஷ்பா படத்திற்குப் பிறகு ராஷ்மிகா மந்தனாவுக்கு கிடைத்த அங்கீகாரம் போலவே, தற்போது ருக்மிணிக்கும் அந்த நிலைமை உருவாகியுள்ளது. இருவரும் கன்னடத் திரையுலகைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ருக்மிணி கூறியதாவது: கடந்த சில நாட்களாக, பலரும் என்னை ‘நேஷனல் கிரஷ்’ என அழைக்கிறார்கள். அதை கேட்பது மகிழ்ச்சியளிக்கிறது, நன்றாகவும் தோன்றுகிறது. ஆனால் நான் இத்தகைய பாராட்டுகளைப் பற்றி அதிகம் யோசிப்பதில்லை, ஏனெனில் அவை தற்காலிகமானவை. காலப்போக்கில் மாறிவிடும் விஷயங்கள் தான்,” எனத் தெரிவித்துள்ளார்.