கன்னட சினிமாவின் முன்னணி கதாநாயகி ரச்சிதா ராம். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி படத்தில் வில்லியாக நடித்திருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். சமீபத்தில் அவருடைய பிறந்தநாளை ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியிருந்தார். இந்நிலையில், ரச்சிதா ராம் கன்னடத்தில் கதையின் நாயகியாக நடித்து வரும் லேண்ட் லார்ட் என்ற படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது.

அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், கூலி படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் சார் பாராட்டினார். அது மிகப்பெரிய விருது கிடைத்த மகிழ்ச்சியை கொடுத்தது. அதோடு அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்திலும் நான் நடிக்கிறேன்.
கூலி படத்திற்கு பிறகு நெகடிவ் கதாபாத்திரங்கள் அதிகமாக வருகிறது என்று கூறியிருக்கும் ரச்சிதா ராம், எனது பெற்றோர் தற்போது எனக்கு வரன் பார்த்து வருகிறார்கள். அதனால் கூடிய சீக்கிரமே திருமணம் செய்து கொள்வேன் என்றும் தனது பிறந்தநாள் செய்தியாக வெளியிட்டுள்ளார் ரச்சிதா ராம்.