விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தவர் கம்பம் மீனா செல்லமுத்து. சமீபத்தில் அந்த தொடர் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் அனைத்து மனிதர்களுக்கும் தனித்து வாழும் உரிமை உண்டு. ஆனால் அது பெண்களுக்கு மட்டும் அவமானத்தின் அடையாளமாய் மாற்றப்பட்டுவிட்டது.துரோகம், இழிவான செயல் அனைத்தையும் செய்துவிட்டு மன்னிப்பு என்று கேட்டவுடன் மன்னிக்கவில்லை என்றால் அவள் தான் சரியில்லாதவள் என்கிறது சமூகம் என்றுள்ளார்.
