விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் மகாநதி. இத்தொடர் 2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரை பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார். தந்தையை இழந்த 4 சகோதரிகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. இதை இளைய தலைமுறையினரும் விரும்பிப் பார்க்கின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சிக்காக தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ள நிலையில், வரும் அக். 6 முதல் மகாநதி தொடர் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
