தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமன்றி, தீவிரமான கார் பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு பிறகு கார் ரேசிங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு முதல் கார் பந்தயங்களில் தீவிரம் காட்டி வரும் அவர், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த கார் பந்தய அணியை உருவாக்கியுள்ளார். இந்த நிறுவனம் துபாய், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் பங்கேற்று வெற்றிகளையும் கோப்பைகளையும்பெற்றது.
மேலும், அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் பங்கேற்க உள்ளது. இதில், அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயனும் கலந்துகொள்கிறார். இந்திய சினிமாவை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தும் விதமாக, அஜித்குமார் தனது கார் மற்றும் ரேஸிங் உடைகளில் இந்திய சினிமாவின் லோகோவை லோகோவை பதித்துள்ளார். முன்னதாக அஜித் தனது ரேஸ் கார் மற்றும் உடைகளில் “Indian Film Industry” என்ற லோகோவை அச்சிடவுள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.