காந்தாரா திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி காந்தாரா சாப்டர்-1 என்கிற இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிய நடித்துள்ளார். பழங்காலத்தில் மன்னர் காலக்கதையாக உருவான இப்படம் உலகளவில் மிகவும். பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. பழங்குடிகள் மற்றும் மன்னர் வாரிசுகளுக்கு இடையேயான கதையில் கடவுள், தொன்மம் என போன்ற விஷயங்களை காட்சிகள் எடுத்துரைக்கின்றன.

கதை கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் உருவாக்க ரீதியாக மிகச்சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளதால், அனைத்து மொழிகளிலும் காந்தாரா சாப்டர் – 1 திரைப்படத்துக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக விஎப்எக்ஸ் காட்சிகள், ருக்மிணியின் நடிப்பு, ரிஷப் ஷெட்டியின் மேக்கிங் என அனைத்தும் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது
மேலும், ஒளிப்பதிவாளர் அரவிந்த் காஷ்யப், இசையமைப்பாளர் அஜனீஸ் லோக்நாத் உள்ளிட்டோரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளனர்.இதனால், இப்படம் வணிக ரீதியாக பெரிய வசூலை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.