இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராய். எத்தனை உலக அழகிகள் வந்தாலும், இவர்தான் நிரந்தர உலக அழகியாக மக்களின் மனங்களில் நிலைத்து விட்டார். 1994 ஆம் ஆண்டு மிஸ் வேர்ல்ட் பட்டம் பெற்ற இவர், தற்போது இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.

இந்திய சினிமா உலகில் யாராலும் தொட முடியாத உச்சத்தில் இருந்த நடிகை ஐஸ்வர்யா ராய், தமிழில் ‘ஜீன்ஸ்’ திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் ரஜினிகாந்த், ஷாருக் கான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து படங்களில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராய்க்கு 2007ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனுடன் திருமணம் நடந்தது. இவர்களது கூட்டணியில் ‘குரு’, ‘ராவன்’ போன்ற பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். சில ஆண்டுகள் காதலித்த பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், லோரியல் பாரிஸ் பேஷன் வீக்கில் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டு ராம்ப் வாக் செய்தது அனைவரையும் வியக்கவைத்தது. பிரபல வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ராவின் ஆடைகள் அணிந்து ராம்ப் வாக் செய்த இவர், இந்திய கைவினைத் திறனை உலகளாவிய அளவில் எடுத்துக்காட்டினார்.