நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், ஃபஹத் ஃபாசில், குஞ்சக்கோ போபன், நயன்தாரா, ரேவதி ஆகியோர் இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் பேட்ரியாட் (Patriot) படத்தில் நடித்துள்ளனர்.

இந்திய அரசியல் ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
இதில், மிகச்சிறந்த இந்திய துரோகியா இல்லை பக்தனா என்கிற கேள்விக்கு இடையே மம்மூட்டி, மோகன்லால் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போது, மலையாள சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் இதுதான் என்பதால் வெளியீட்டிற்காக பலரும் காத்திருக்கின்றனர்.