கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் 1987ஆம் ஆண்டு வெளியானது. தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இப்படத்தை இயக்கியது மணி ரத்னம். படத்திற்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா.

இந்த படத்தின் மூலம் நடிகை சரண்யா திரையுலகில் அறிமுகமானார். அவருடன் ஜனகராஜ், கார்த்திகா, நாசர், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, விஜயன், எம்.வி. வாசுதேவ ராவ், டாரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, டின்னு ஆனந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் அந்நாளில் தமிழ்நாட்டில் தொடர்ந்து 214 நாட்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக, மணி ரத்னம் இயக்கத்தில் உருவான நாயகன் திரைப்படத்தை வரும் நவம்பர் 6ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.