Touring Talkies
100% Cinema

Thursday, October 2, 2025

Touring Talkies

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மோகன்லாலுக்கு பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்தும் கேரள அரசு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லாலுக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாஹேப் விருது வழங்கப்பட்டது.இந்திய திரையுலகில் The Complete Actor என அழைக்கப்படும் மோகன்லால் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.கடந்த 23 ஆம் தேதி டெல்லியில் நடந்த 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இருந்து மோகன்லால் இந்த விருதை பெற்றுக்கொண்டார். இந்நிலையில் ‘லால்-சலாம்’ என்ற தலைப்பில் அக்டோபர் 4 ம் தேதி மாலை 5 மணிக்கு கேரள அரசு சார்பில் பிரம்மாண்டமான பாராட்டு விழா நடைபெற உள்ளது என கேரள கலாச்சார துறை அமைச்சர் சாஜி செரியன் அறிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News