தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுபமா. சமீபத்தில் அவர் நடித்த கிஷ்கிந்தாபுரி திரைப்படம் திரைக்கு வந்து, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக, அவர் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ள பைசன் படம் வருகிறது. இந்த திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமீபத்திய ஒரு நேர்காணலில் அனுபமா தனது பள்ளிப் பருவ நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார். அவர் பேசுகையில், “சின்ன வயதில் இருந்தே நடிப்பில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. ஆனால் என் பள்ளியில், முதல் இடம் பெறும் மாணவர்களுக்குத்தான் மேடைகளில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். ஏனென்றால், நல்லா படிக்கும் மாணவர்களால்தான் பெரிய வசனங்களை மனப்பாடம் செய்து சொல்ல முடியும் என்று அப்போது ஆசிரியர்கள் நினைத்தார்கள். அது என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
நான் பள்ளியில் ஒருபோதும் டாப்பர் இல்லை. அதனால், ‘நடிகையாவே முடியாது போலிருக்கிறது’ என்று பயந்தேன். எனது கனவை நான் ஒதுக்கி வைத்தேன். ஆனால் கொஞ்சம் வளர்ந்த பின் தான் உண்மையை உணர்ந்தேன். படிப்புக்கும், நடிப்புக்கும் நேரடியான சம்பந்தமே இல்லை. நடிகை ஆவதற்கு மனவலிமையும் ஆர்வமும் இருந்தால் போதுமானது என்று நான் புரிந்துகொண்டேன்” என்று கூறினார்.