தென்னிந்திய திரைப்பட உலகில் ‘மிஸ்டர் பச்சன்’ மற்றும் ‘கிங்டம்’ படங்கள் மூலம் அறிமுகமான நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனங்களை கவர்ந்து, குறுகிய காலத்திலேயே திரைத்துறையின் கவனத்தை தன்னிடம் ஈர்த்துள்ளார். இப்படங்களின் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலத்தையும், தனித்துவமான அடையாளத்தையும் பெற்றுள்ளார்.

இதற்கிடையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாக்யஸ்ரீ போர்ஸ், தென்னிந்திய சினிமா குறித்து தனது எண்ணங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர், “சினிமாவில் மொழி வேறுபாடு என்பதே கிடையாது. அது கலை. அந்தவகையில், நான் தெலுங்கு சினிமாவைத் தாண்டி தமிழ் சினிமாவிலும் நடிக்க மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறேன். நல்ல வாய்ப்பு கிடைத்தால், நிச்சயமாக தமிழிலும் நடிப்பேன். முன்பை விட இப்போது நல்ல கதைக்களங்கள் கொண்ட படங்கள் அதிகம் உருவாகி வருகின்றன. குறிப்பாக, கதாநாயகிகளுக்கும் வலுவான கதாபாத்திரங்கள் கிடைக்கின்றன. அவர்கள் தனித்துவமான அடையாளத்தைப் பெறுகின்றனர். இது எனக்கு பெரும் ஊக்கமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது அவர், துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் காந்தா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

