Touring Talkies
100% Cinema

Thursday, October 2, 2025

Touring Talkies

தென்னிந்திய மொழிகளில் மூன்று கதாநாயகிகள் நடிப்பில் உருவாகும் ‘ஹெய் லெசோ’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கில் வஜ்ர வராஹி சினிமாஸ் சார்பில் சிவா சேர்ரி மற்றும் ரவி கிரண் தயாரிக்கின்ற படம் ஹெய் லெசோ. இதனை பிரசன்னா குமார் கோட்டா இயக்குகிறார். சுதீர் ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் இது அவரது ஐந்தாவது படம் ஆகும். கோர்ட் திரைப்படத்தில் வில்லனாக நடித்த சிவாஜி, இந்த படத்திலும் எதிரணி வேடத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் நடாஷா சிங், நக்ஷா சரண், அக்ஷரா கவுதா ஆகிய மூன்று நடிகைகள் நாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் மொட்ட ராஜேந்திரன், கெட்அப் ஸ்ரீனு, பெவரா துஹிதா சரண்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனுதீப் தேவ் இசையமைப்பில், சுஜாதா சித்தார்த் ஒளிப்பதிவில் படம் உருவாகிறது.

படத்தின் பணிகள் பூஜையுடன் துவங்கப்பட்டுள்ளன. இப்படம் குறித்து இயக்குனர் பிரசன்னா குமார் கூறுகையில்: “ஹெய் லெசோ என்பது விவசாயிகளிடையே பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு நாட்டுப்புறச் சொல். படத்திற்கு இயற்கையான மண் மணத்தைக் கொடுக்கவே இந்த பெயர் வைக்கப்பட்டது. புராணத் தன்மையும், கிராமிய சுவையும் கலந்த திரைப்படமாக இது உருவாகிறது,” என்றார். மேலும், ஹெய் லெசோ படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News