ரிஷப் ஷெட்டி இயக்கி, நடிக்கும் அக்டோபர் 2ம் தேதி வெளியாக உள்ள படம் ‘காந்தாரா சாப்டர் 1’. இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் ஜூனியர் என்டிஆர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஜூனியர் என்டிஆர் பேசுகையில், “என் தாய் வழி மூதாதையர்கள் கர்நாடகாவின் குண்டாப்பூராவைச் சேர்ந்தவர்கள். என் பாட்டி எனக்கு ‘குல்கா தேவா’ மற்றும் ‘பஞ்ஜுர்லி’ பற்றிய கதைகளைச் சொல்வார். நான் அந்தக் கதைகளை கற்பனை செய்து கனவு காண்பேன், அது எப்படி இருக்கும் என்று ஆச்சரியப்படுவேன். ரிஷப் ஷெட்டி காந்தாரா மூலம் பெரிய திரையில் என் கனவை நனவாக்கியுள்ளார்.
