Touring Talkies
100% Cinema

Thursday, October 2, 2025

Touring Talkies

என்னைப்பற்றி தவறாக விமர்சிக்க வேண்டாம்… நடிகை மகிமா நம்பியார் கொடுத்த வார்னிங்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை மகிமா நம்பியார் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே  பிரபலமானவர். சமீபத்தில் அவர் நடித்த மலையாள திரைப்படமான ப்ரொமான்ஸ் வெளியானது. தமிழில் சூரி நடிப்பில் உருவாகி வரும் மண்டாடி மற்றும் சத்திய சிவா இயக்கத்தில் உருவாகும் பெல் பாட்டம் (கன்னட ரீமேக்) படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீப காலமாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் சில யூடியூப் சேனல்கள் வழியாக தன்னைப் பற்றிய தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சனங்கள் வெளியாகி வருவதை கண்டநிலையில், தனது எதிர்ப்பை சமூக ஊடகத்தின் மூலம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: “இதுவரை இவ்வாறானவர்களை நான் அமைதியாகவும் பொறுமையுடனும் சகித்துக் கொண்டேன். ஆனால் இனிமேல் அப்படியே இருக்கப் போவதில்லை. நான் உங்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடப்போவதில்லை. அதேபோல், என் விஷயங்களில் நீங்கள் தலையிட வேண்டாம். ஒருவேளை இதை மீறி, என்மீது அவதூறு கருத்துகளை பதிவு செய்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவீர்கள். இது என் கடைசி எச்சரிக்கை” எனக் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News