துபாய், பெல்ஜியம் நாடுகளைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார் நடிகர் அஜித்குமார். இங்கு Ajith Kumar Racing அணியின் சார்பில் நான்கு போட்டிகளில் அவர் பங்கேற்கிறார். இதில் இரண்டு போட்டிகள் இந்த மாதத்தில், மேலும் இரண்டு போட்டிகள் அடுத்த மாதத்தில் நடைபெற உள்ளன.

இந்நிலையில், அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் அவர்களின் மகள் அனோஷ்கா, ஸ்பெயினுக்கு சென்று அஜித்தை சந்தித்துள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்களை ஷாலினி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு, “எனது சாம்பியனுக்கு அருகில் இருக்கிறேன்” என்று கேப்ஷனையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
மேலும், இந்த கார் பந்தயங்கள் அடுத்த மாதத்தில் நிறைவடைந்தவுடன், அஜித் ஸ்பெயினிலிருந்து சென்னைக்கு திரும்பவுள்ளார். அதையடுத்து, வரும் நவம்பர் மாதம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அஜித்தின் 64வது படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

