பவன் கல்யாண் நடிப்பில், சுஜீத் இயக்கத்தில், நேற்று முன்தினம் திரைக்கு வந்த படம் ‘தே கால் ஹிம் ஓஜி’ நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்னதாக, ‘ஓஜி’ திரைப்படத்தை அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்துடன் ஒப்பிட்டு பல விமர்சனங்கள் எழுந்தன. சமீபத்திய நேர்காணலில் சுஜீத் இந்த ஒப்பீடுகளைப் பற்றி பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, “எனக்கு ஆதிக்கை நன்றாக தெரியும். ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ உருவான காலத்திலிருந்தே அவரை எனக்குத் தெரியும். அவருக்கும் என்னையும், என் படங்களையும் அவர் மிகவும் விரும்புகிறார்.
‘குட் பேட் அக்லி’ படத்தில் இருந்து ஓஜி சம்பவம் என்ற தலைப்பில் பாடல் வெளியானது. பொதுவாக, முதலில் எது வெளியாகிறதோ அது அசலாகக் கருதப்படும். அவர்கள் அதை வேண்டுமென்றே செய்யவில்லை; ஆனால் என் படம் விமர்சிக்கப்பட்டது. இருப்பினும் ஆதிக் ‘குட் பேட் அக்லி’ ஸ்கிரிப்டை எழுதத் தொடங்குவதற்கு முன்பே, நான் ஓஜி கிளிம்ப்ஸை வெளியிட்டிருந்தேன்” என்றார்.