பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் தனது ‘போர்ஸ்’ படத்தின் மூன்றாவது பாகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். போர்ஸ் 3 படத்தை இயக்க பாவ் துலியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளார் என்றும், இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வந்துள்ளன என்றும் கூறப்படுகிறது.

இதில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தெரிய வருகிறது. பலரை ஆடிஷன் செய்த பிறகு, ஜான் ஆபிரகாமும் பாவ் துலியாவும் போர்ஸ் 3 படத்தின் கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரியை தேர்வு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவே உண்மை என்றால், மீனாட்சி சவுத்ரி பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகும் படமாக இது இருக்கும். அவர் ஏற்கனவே ‘அப்ஸ்டார்ட்ஸ்’ என்ற இந்தி படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.