மறைந்த பிரபல நடிகையான ஸ்ரீதேவியின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூர். பாலிவுட், டோலிவுட் என பிசியாக வலம் வருகிறார். இந்நிலையில் ஜான்வி கபூரிடத்தில் உங்கள் தாய் ஸ்ரீதேவி அளவுக்கு முன்னணி நடிகையாக முயற்சி எடுப்பீர்களா? என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, என்னுடைய அம்மா மாதிரி என்னால் வரவே முடியாது. அவர் தன்னுடைய 4 வயதிலேயே நடிக்க ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 300 படங்களில் நடித்துள்ளார். அவர் சாதனையுடன் என்னை ஒப்பிடுவது தவறு என்றுள்ளார்.
