‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் ‘அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே’ படத்தை இயக்கின்றனர். இதில் ராபர்ட் டவுனி ஜுனியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், பிளாக் பாந்தர் பார்எவர் படத்தில் ஷூரி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை லெட்டிடியா ரைட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.இப்படம் வரும் 2026-ம் ஆண்டு டிசம்பர் 18ந் தேதி வெளியாகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள படக்குழு அறிவித்துள்ளது. தற்போது, இந்த படத்தின் பின்னணி வேலைகளான விஎப்எஸ் நடைபெற உள்ளன.
