பிரபல நடிகர் மோகன்லால் இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், மத்திய அரசு அவருக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாதாசாகேப் பால்கே விருது தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் மோகன்லாலுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. மோகன்லாலின் சிறப்பான சினிமா பயணம், எதிர்கால தலைமுறையினருக்கு ஊக்கமாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, புகழ்பெற்ற நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான மோகன்லால் இந்த விருதால் கௌரவிக்கப்படுகிறார். வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.