தமிழில் விஜய்யுடன் ‘புதிய கீதை’ படத்தின் மூலம் அறிமுகமான அமிஷா படேல், தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது 50 வயதைக் கடந்தும் திருமணம் செய்யாமல் இருப்பதைப் பற்றி அவர் பேட்டியளித்துள்ளார்.

அதில், “திருமணம் செய்துவிட்டால் சினிமாவை விட்டு வீட்டிலேயே இருக்க வேண்டியதாக பலர் கூறுகிறார்கள். ஆனால் இன்னும் எனக்கு பொருத்தமான ஹீரோ வரவில்லை. திருமணத்துக்கான முன்மொழிவுகள் அதிகம் வருகிறது. ஆனால் அவை பெரும்பாலும் எனக்கு பாதி வயது இளைஞர்களிடமிருந்து தான். என் தொழில் வாழ்க்கைக்காக நான் பல தியாகங்கள் செய்தேன். காதலுக்காகவும் நிறைய விட்டுவிட்டேன். சினிமாவுக்கு வருவதற்கு முன், மும்பையை சேர்ந்த பெரிய தொழில் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் உறவில் இருந்தேன்.
ஆனால் சூழ்நிலை காரணமாக காதலை விட தொழிலைத் தேர்ந்தெடுத்தேன். தகுதியான ஒருவரை சந்திக்கும் வரை நான் காத்திருக்கிறேன். என் வயதில் பாதி உள்ளவர்கள் என்னை டேட்டிங் அழைக்க விரும்புகிறார்கள். ஆனால் ஒரு ஆண் உண்மையாக மனரீதியாக முதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும்” என்றார்.