ஒரு காதல் திரைப்படமாக திரைக்கு வந்த ”லிட்டில் ஹார்ட்ஸ்”, தற்போது பார்வையாளர்களை கவர்ந்து, மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றுள்ளது. வெறும் 2.5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த காதல் நகைச்சுவை படத்தில், புதுமுகங்களான மவுலி தனுஜ் பிரசாந்த் மற்றும் ஷிவானி நகரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குநர் சாய் மார்த்தாண்ட் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் தேவரகொண்டா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “ஒரு நடிகரான பிறகு, புதுமுக நடிகர்களின் வெற்றியைக் கொண்டாடுவது எவ்வளவு முக்கியம் என்பதை நான் உணர்ந்தேன். எந்த பின்னணியும், ஆதரவும் இல்லாமல் இவர்கள் வெற்றிப் படம் கொடுத்திருக்கிறார்கள். அதை நாம் பாராட்ட வேண்டும்.
இன்று மவுலியைப் பார்த்து, பலர் நாமும் நடிகராகலாம் என்ற நம்பிக்கை பெறுவார்கள்” என்றார். மேலும், “யாருடைய அறிவுரையையும் அதிகமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். யாரையும் போல வாழ முயற்சிக்க வேண்டாம். நீங்களாகவே இருங்கள்” என்றும் தெரிவித்தார்.