தற்போது தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ‘சம்பரலா ஏடிக்கட்டு’. சாய் துர்கா தேஜ் நடிப்பில் பான்-இந்தியா ரீதியில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த படத்தை ரோஹித் இயக்குகிறார். கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பட்ஜெட் ரூ.125 கோடி என கூறப்படுகிறது. இது நடிகர் சாய் துர்கா தேஜ் திரைப்பட வாழ்க்கையில் இதுவரையில்லாத மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் திரைப்படம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சாய் துர்கா தேஜ் இந்தப் படத்திற்காக தீவிரமாகத் தயாராகி நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
இதில் ஐஸ்வர்யா லட்சுமி, ஜகபதி பாபு, ஸ்ரீகாந்த், சாய் குமார், அனன்யா நாகல்லா, ரவி கிருஷ்ணா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். கூடுதலாக ஹாலிவுட்டைச் சேர்ந்த பிரபல வில்லனும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஒளிப்பதிவை வெற்றி பழனிசாமி மேற்கொள்கிறார், இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.