இயக்குனர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடித்து வரும் நூறுசாமி திரைப்படமும், இவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு இணைந்து கொடுத்த பிச்சைக்காரன் படத்துக்கும் கதை ரீதியாக தொடர்பு உள்ளது என்று கூறப்படுகிறது. பிச்சைக்காரன் படம் அம்மா சென்டிமென்டை மையமாகக் கொண்டு உருவானது. ஒரு கோடீஸ்வரன் தனது தாய்க்காக ஏன் பிச்சை எடுக்கிறான் என்பதே அந்தப் படத்தின் கருவாக அமைந்தது.

அதேபோல, நூறுசாமி படமும் அதே சென்டிமென்டை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. அதனால்தான் “நூறுசாமிகள் இருந்தாலும் அம்மா உன்போல் ஆகிடுமா” என்ற பாடல் வரியைத் தலைப்பாக பயன்படுத்தியுள்ளனர் என்கிறார்கள்.பிச்சைக்காரன் படத்தில் தீபா ராமானுஜம் தாயாக நடித்திருந்தார்.
இப்படத்தில், சுஹாசினி தாயாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது .இவருடன், லப்பர் பந்து புகழ் ஸ்வாசிகா, லிஜோமோல் ஜோஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும், விஜய் ஆண்டனியுடன் அவரது அக்கா மகனான அஜயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.