கணினி அறிவியலில் பட்டம் பெற்ற மென்பொருள் பொறியாளரான திரிப்தி ரவிந்தரா, ஐந்து வருடங்கள் மேடை நாடக அனுபவம் பெற்ற பிறகு நடிப்புத் துறைக்குள் நுழைந்திருக்கிறார். ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.சக்தித் திருமகன் படத்தில் நடித்திருப்பது பற்றி அவர் கூறும்போது, “நான் நன்கு நடிப்பு பயிற்சி எடுத்துள்ளேன். மேடை நாடக அனுபவம் இருக்கிறது. தற்போது ‘சக்தித் திருமகன்’ படத்தில் இயக்குநர் அருண் பிரபு, விஜய் ஆண்டனி சார் மற்றும் படக்குழுவினருடன் பணிபுரிந்ததும் இந்தப் படம் மூலம் அறிமுகமாவதும் என் வாழ்வின் பெருமையான தருணம். இந்தப் படம் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன் என்றுள்ளார்.


