விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான தனுஸ்ரீ தத்தா இது குறித்து அளித்த பேட்டியில், ‘கடந்த 11 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அவர்களை திட்டி விடுவேன். நிகழ்ச்சியில் பங்கேற்க கோடிகள் தருவதாக சொன்னார்கள். ஆனால் நான் மறுத்து விட்டேன். நிலாவையே தருவதாக சொன்னாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன். ஆண்களும், பெண்களும் ஒன்றாக ஒட்டி உறாவாடியும், சண்டைப் போட்டுக் கொண்டு இருக்க என்னால் முடியாது. ஒரு ரியாலிட்டி ஷோவுக்காக ஒரு இப்படி இருக்க முடியாது என்றுள்ளார்.
