தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் வெற்றிகரமாக பயணித்து வரும் தனுஷ் இட்லி கடை படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் எந்த வகை கதைக்களத்துடன் இருக்கும் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் நிலவி வருகிறது. இதில் அருண் விஜய் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இட்லி கடை வரும் அக்டோபர் 1ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கான இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு மைதானத்தில் சமீபத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், இட்லி கடை படத்தின் 3வது பாடலான என் பாட்டன் சாமி நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டரின் மூலம் அறிவித்துள்ளது.