இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ராஷி கண்ணா, தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் உஸ்தாத் பகத்சிங் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் அவர் நிறைவு செய்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் படப்பிடிப்பு புகைப்படத்தை பகிர்ந்த ராஷி கண்ணா, “பவன் கல்யாணுடன் இணைந்து நடித்த உஸ்தாத் பகத்சிங் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.
அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மிகச் சிறப்பானது. வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் தருணமாகவும், எனக்கு பெரும் கவுரவமாகவும் அமைந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.