ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கத்ரினா கைப், நடிகர் விக்கி கவுஷலை காதலித்து 2021ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்கள் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்ற செய்திகள் வெளியாகி வருகிறது. அடுத்த மாதம் அக்டோபர் அல்லது நவம்பரில் குழந்தை பிறக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து சமீபத்தில் பேட் நியூஸ் படத்தின் நிகழ்ச்சியில் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, “நல்ல செய்தியை உங்களுடன் பகிர்வது எங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இப்போது பரவி வரும் யூகங்களில் எதுவும் உண்மையல்ல,” என்று அவர் பதிலளித்தார்.
கடந்த சில மாதங்களாகவே கத்ரினா கைப் பொதுவில் அதிகமாக தோன்றவில்லை என்பதால் இந்த சந்தேகம் வலுப்பெற்றது. அவர் கடைசியாக 2024ஆம் ஆண்டில் ஹிந்தி மற்றும் தமிழில் வெளியான மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்தார். அதன்பின் எந்த திரைப்படத்திலும் அவர் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.