பிரபாஸ் நடித்த ஆதிபுரூஷ், தனுஷ் உடன் தேரே இஸ்க் மெயின் படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகை கிர்த்தி சனோனும் தனது கணுக்காலில் ஒரு அழகான பறவையை பச்சை குத்தி உள்ளார்.இது குறித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார் அவர். அதுபற்றி, ‛‛நான் பச்சை குத்துவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் இப்போது அதை ஒரு தனிப்பட்ட நினைவூட்டலாக செய்திருக்கிறேன். அதோடு, கண்களில் கனவுகளுடன் இருக்கும் எவருக்கும் நீங்கள் பயப்படும் அந்த பாய்ச்சல் எடுங்கள். இது எளிதாக இருக்காது. ஆனால் நீங்கள் உங்கள் இறக்கைகளை காண்பீர்கள். உங்கள் தாளத்தை காண்பீர்கள். நீங்கள் பறக்க கற்றுக் கொள்வீர்கள்” என்றும் பதிவிட்டுள்ளார்.
