நடிகை ஷாதிகா அளித்த சமீபத்திய பேட்டியில், மகாநதி தொடரில் நடித்தபோது இருந்த தயக்கம் குறித்து அவர் கூறியதாவது, மகாநதி சீரியலில் ராகினி கதாபாத்திரத்தில் கமிட் ஆகும் போது எனக்கு இது இவ்ளோ பெரிய நெகட்டிவ் கதாபாத்திரம் என தெரியாது. நான் சீரியலில் நடிக்கும் போது இந்த மாதிரி யாரும் என்னை மோசமாக திட்டியதில்லை. திடீரென்று அவ்வளவு வெறுப்பு பார்க்கவும் ரொம்ப பயந்துட்டேன். இது நமக்கு செட் ஆகுதா, இல்லையா என குழப்பமா இருந்தது. நான் ரொம்ப சென்சிடிவ் ஆன கேரக்டர். சமூக வலைதளங்களில் கமென்ட்களை படித்துவிட்டுச் இயக்குனர் பிரவீன் சார்கிட்ட சீரியலில் இருந்து விலகிக்கிறேன் என்றெல்லாம் கூறினேன். அவர், கமென்ட் எல்லாம் மனதில் வச்சுகாதீங்க விடுங்க என கூறி என்னை ஆறுதல் படுத்தினார் எனக் கூறினார்.
