தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வரும் தனுஷ், இயக்குநராக தனது நான்காவது படமாக ‘இட்லி கடை’ படத்தை இயக்கியுள்ளார். தனுஷே இயக்கி நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குறிப்பாக இப்படத்தில் அருண் விஜய் அஷ்வின் என்கிற கதாபாத்திரத்திலும், நடிகர் சத்யராஜ் விஷ்ணு வர்தன் என்கிற கதாபாத்திரத்திலும், நடிகர் ராஜ்கிரன் சிவனேசன் கதாப்பாத்திரத்திலும் நடிப்பதாக அறிமுக போஸ்டர் வெளியானது. ‘மேலும் கயல் என்ற கதாப்பாத்திரத்தில் நித்யா மேனனும், நடிகை ஷாலினி பாண்டே மீரா என்ற கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், இட்லி கடையில் கதாநாயகனாக நடித்துள்ள நடிகர் தனுஷின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தனுஷ் முருகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும், இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.