இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜமால் உள்ளிட்டோர் நடித்த மதராஸி திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரிய புரமோஷன் இல்லாததால் முன்பதிவுகள் எதிர்பார்த்த அளவில் நடைபெறவில்லை. இருந்தாலும், சண்டைக் காட்சிகள் மற்றும் கதைக்களம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்றதால் அடுத்தடுத்த நாட்களில் கவனம் பெற்றது.தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, மதராஸி உலகளவில் ரூ. 65 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
